மகளுக்காக ரூ.200 கோடி செலவு; பக்கா பிளான் போடும் ஷாருக்கான் - எதற்காக தெரியுமா?
தனது மகளுக்காக ரூ.200 கோடி செலவு செய்து நடிகையாக அறிமுகப்படுத்த ஷாருக்கான் தயாராகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ஷாருக்கான்
பாலிவுட்டில் முன்னணி நடிகராக வளம் வருபவர் ஷாருக்கானை. பாலிவுட் பாட்ஷா, கிங்கான் என ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படும் இவருக்கு உலக அளவில் ரசிகர்கள் உள்ளனர். ஷாருக்கான் நடிப்பில் கடைசியாக டங்கி திரைப்படம் வெளியாகியிருந்தது.

இதனை தொடர்ந்து அடுத்ததாக கிங் என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் இயக்குநராக முயற்சி செய்து பயிற்சி எடுத்து வருகிறார். மகள் சுஹானா கான் கதாநாயகியாக விரும்புகிறார்.
சுஹானா கான்
இதனால் ரூ.200 கோடி செலவு செய்து சுஹானாவை இந்தி படத்தில் நடிகையாக அறிமுகப்படுத்த ஷாருக்கான் தயாராகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சுஜோய் கோஷ் இயக்கும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஷாருக்கான் நடிக்க இருக்கிறார்.

இந்த படத்தில்தான் மகள் சுஹானா கானை நடிகையாக அறிமுகம் செய்கிறார். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இந்த படம் ரிலீசானதும் மகளுக்கு அதிக சினிமா வாய்ப்புகள் வரும் என்று அவர் நம்புகிறார்.
இலங்கையில் முதன் முறையாக பயன்படுத்தப்பட்ட அதிக சக்திவாய்ந்த வெடிபொருள்! ஈஸ்டர் வழக்கில் ஜமைக்காவில் இருந்து வழங்கப்பட்ட சாட்சியம் IBC Tamil
ஈஸ்டர் தாக்குதலின் அரசியல் பின்னணி: ராஜபக்சர்களை அச்சத்தில் ஆழ்த்திய விசில்ப்ளோயர் சாட்சிகள் IBC Tamil