உங்களுக்காக தினமும் பிரார்த்தனை செய்கிறேன்..ஷாரூக்கானை கட்டி அணைத்த டிடி..!

Dhivyadharshini Shah Rukh Khan
By Nandhini Jun 28, 2022 10:17 AM GMT
Report

திவ்ய தர்ஷினி

திவ்ய தர்ஷினி என்கிற டிடி, விஜே மட்டும் கிடையாது, பல ரசிகர்களுக்கும் இன்ஸ்பிரேஷனாக திகழ்ந்து வருபவர். ஆர்.ஜே வாக இருந்து, பின்னர் விஜேவாகவும், மாடலாகவும் திகழ்ந்த டிடி, சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். காஃபி வித் டிடி போன்ற நிகழ்ச்சிகள் மூலம் டிடி இன்னும் அதிக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

dhivyadharshini

வைரலாகும் புகைப்படம்

இந்நிலையில், டிடி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் நடிகர் ஷாருக்கானைப் பற்றி நெகிழ்ச்சி பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், "நான் அவரை இறுகக் கட்டிப்பிடித்து, நான் சொல்ல நினைத்த அனைத்தையும் அவரிடம் சொன்னேன், 'இவ்வளவு வருஷங்கள், பல நினைவுகள், நீங்கள் எங்களுக்குக் கொடுத்துள்ள மகிழ்ச்சி, சார், அனைத்திற்கும் நீங்கள் மட்டுமே தகுதியானவர், சிறந்த வாழ்க்கையின் சிறந்தவர் சார். உங்கள் இதயத்தின் மகிழ்ச்சிக்காக தினமும் பிரார்த்தனை செய்வேன் சார்" என பதிவிட்டுள்ளார்.