உலகின் மிக உயரமான 'புர்ஜ் கலிஃபா' கிங் கட்டிடத்தில் மலர்ந்த ஷாருக்கான் முகம் - வைரலாகும் வீடியோ

Viral Video Shah Rukh Khan
By Nandhini Nov 03, 2022 06:13 PM GMT
Report

ஷாருக்கானின் பிறந்தநாளையொட்டி, உலகின் மிக உயரமான 'புர்ஜ் கலிஃபா' கிங் கட்டிடத்தில் ஷாருக்கானின் புகைப்படம் வெளியிடப்பட்டது.

நடிகர் ஷாருக்கான்

பாலிவுட் திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகராக வலம் வருபவர் ஷாருக்கான். தற்போது நடிகர் ஷாருக்கான், அட்லீ இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்தில், பிரியாமணி, யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

shah-rukh-khan-birthday-burjkhalifa-viral-video

உலகின் மிக உயரமான கட்டிடத்தில் மலர்ந்த ஷாருக்கான் புகைப்படம்

நடிகர் ஷாருக்கான் நேற்று தன்னுடைய 57வது பிறந்தநாளை கொண்டாடினார்.

அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறு ஷாருக்கான வீட்டின் முன்பு லட்சக்கணக்கான ரசிகர்கள் ஒன்றாக திரண்டனர். வெளியே வந்து பார்த்த ஷாருக்கான ரசிகர்களின் அன்பில் திக்குமுக்காடினார். வீட்டின் மேலிருந்து ரசிகர்களின் கூட்டத்தின் மத்தியில் செல்பி எடுத்துக் கொண்டார்.

தற்போது இது குறித்த வீடியோ வைரலாகி வரும் வேளையில், நேற்று இரவு ஷாருக்கானின் பிறந்தநாளையொட்டி, துபாயின் புர்ஜ் கலீஃபாவில் அவரது படத்துடன்ஒரு சிறப்பு வாழ்த்துக் கூறப்பட்டது.

சூப்பர் ஸ்டாரின் ஒரு சின்னப் பாடலும் பின்னணியில் ஒலிக்க, உலகின் மிக உயரமான கட்டிடமான 'புர்ஜ் கலிஃபா' கிங் கட்டிடத்தில் ஷாருக்கானின் முகம் வெளியாகி மலர்ந்தது.

இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் ஆரவாரம் செய்து, கைத்தட்டி, ஷாருக்கானுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.