விஜய் பாணியில் செல்பி எடுத்த ஷாருக்கான் - வைரலாகும் புகைப்படங்கள் - ரசிகர்கள் மகிழ்ச்சி
பாலிவுட் திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகராக வலம் வருபவர் ஷாருக்கான்.
தற்போது நடிகர் ஷாருக்கான், அட்லீ இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் ஷாருக்கான். இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்தில், பிரியாமணி, யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில், நேற்று ரமலான் பண்டிகை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இதையொட்டி நடிகர் ஷாருக்கான் வீட்டின் முன்பு ரசிகர்கள் குவிந்தனர். அப்போது, வீட்டின் மாடிக்கு ஷாருக்கான் வந்தான். அப்போது, அவருக்கு ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்து கோஷமிட்டனர்.
கூட்டத்தைப் பார்த்து பிரம்மித்துப்போன ஷாருக்கான், பால்கனியில் இருந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். அவர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார்.
தற்போது அந்த செல்பி புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதைப் பார்த்த விஜய் ரசிகர்கள், இது மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடந்தபோது, நடிகர் விஜய் வேன் ஒன்றின் மீது ஏறி எடுத்த செல்பி புகைப்படத்தைப் போலவே உள்ளதே என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.