பேட்டிங்கில் 39 பந்தில் 69 ரன்! பந்துவீச்சில் 3 விக்கெட்.. ஆல்ரவுண்டராக சம்பவம் செய்த ஷதாப் கான்
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியை வீழ்த்தியது.
ஹஸன் நவாஸ் அதிரடி
PSL 2026 தொடரின் 9வது போட்டியில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் மற்றும் இஸ்லாமாபாத் அணிகள் மோதின.

முதலில் களமிறங்கிய குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியில் ஷமில் 15 பந்துகளில் 21 ரன் விளாசி ஆட்டமிழக்க, கேப்டன் சவுத் ஷகீல் 26 பந்துகளில் 42 ரன்கள் விளாசினார்.
அடுத்து நஃபே 18 ரன்னில் வெளியேற, ஹஸன் நவாஸ் அதிரடி ஆட்டத்தில் மிரட்டினார். அவர் 36 பந்துகளில் 66 ரன்கள் (3 சிக்ஸர், 3 பவுண்டரிகள்) விளாச, குவெட்டா கிளாடியேட்டர்ஸ் 183 ரன்கள் குவித்தது.

அபாரமாக பந்துவீசிய இஸ்லாமாபாத் கேப்டன் ஷதாப் கான் 23 ரன்களே கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
ஷதாப் கான் மிரட்டல்
அடுத்து களமிறங்கிய இஸ்லாமாபாத் அணியில் சமீர் மின்ஹாஸ் மற்றும் ஷதாப் கான் இருவரும் அதிரடி ஆட்டத்தில் அவுட் ஆகாமல் அரைசதம் விளாசினர்.

இதன்மூலம் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 18.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்து, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
சமீர் மின்ஹாஸ் 48 பந்துகளில் 82 ரன்களும் (3 சிக்ஸர், 8 பவுண்டரிகள்), ஷதாப் கான் 39 பந்துகளில் 4 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 69 ரன்களும் விளாசினர்.
அரைசதம் அடித்ததுடன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டிய ஷதாப் கான் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
