சீரியலுக்காக அப்படி நடிச்சேன்..!! ஒரு வருஷம் யாருமே பேசல..! ஷபானா வருத்தம்!!

Shabana Shajahan Tamil Actress
By Karthick Dec 13, 2023 06:05 PM GMT
Report

தமிழ் சின்னத்திரை நடிகைகளில் தற்போது ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான நடிகையாக வளம் வருகின்றார் ஷபானா.

ஷபானா

செம்பருத்தி சீரியலில் அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை ஷபானா. மும்பையைச் சேர்ந்த இவர் அறிமுகமான முதல் சீரியலிலேயே ரசிகர்களை கவர்ந்தார். வெகுளியாக அந்த சீரியலில் நடித்த ஷாபனாவின் நடிப்பும் பலரை கவர்ந்தது.

shabana-shares-as-she-acted-as-hindu-girl  

மேலும், சமூகவலைத்தளத்திலும் இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் ஒன்று உருவாக தமிழ் சின்னத்திரை நடிகைகளில் பெரும் முக்கியத்துவத்தை தற்போது ஷபானா பெற்றுள்ளார்.

 யாருமே பேசல

இந்நிலையில், சீரியலில் இந்து பெண்ணாக நடித்தற்கு அவர் குடும்பமே அவருடன் பேசவில்லை என்பதை பேட்டி ஒன்றில் ஷபானா தெரிவித்துள்ளார். இதுபற்றி பேசிய அவர் ‘நான் சீரியலில் பொட்டு வைத்துக் கொண்டு நடித்ததற்காக என் குடும்பத்தினர் என்னிடம் ஒரு வருட காலம் பேசவில்லை.

shabana-shares-as-she-acted-as-hindu-girl

இந்து பையனை திருமணம் செய்யக் கூடாது எனவும் அடிக்கடி சொல்லிக்கொண்டே இருந்தார்கள். அதனால்தான் நான் ஒரு இந்து பையனை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என முடிவெடுத்தேன்” எனக் கூறியுள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் நடிகர் ஆரியன் என்பவரை திருமணம் செய்துகொண்டார் என்பது அனைவரும் அறிந்ததே.