அந்த பட்டம் வலியை கொடுத்தது; எனக்கு அது கூட நடக்கவில்லை - நடிகை சோனா வேதனை!

Jiyath
in பிரபலங்கள்Report this article
நடிகை சோனா தான் இயக்கவிருக்கும் இணைய தொடரின் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசியுள்ளார்.
நடிகை சோனா
மிருகம் என்னும் திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தவர், நடிகை சோனா. பின்னர் வடிவேலு உள்ளிட்ட பல்வேறு நகைச்சுவை நடிகர்களுடன் இணைந்து நடித்தார். குசேலன் படத்தில் வடிவேலுவின் மனைவியாக இவர் நடித்தது பலரையும் ரசிக்க வைத்தது.
மேலும் அவர் கவர்ச்சி கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளட்ட 50க்கும் மேற்பட்ட மொழிகளில் நடித்த சோனா, சில ஆண்டுகள் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தார்.
இந்நிலையில் தற்போது இயக்குநராக களமிறங்கி "ஸ்மோக்" (Smoke) என்ற இணைய தொடரை அவர் இயக்கவுள்ளார். தன்னுடைய வாழ்வில் நடந்த பல சம்பவங்களை கதையாக எழுதி, திரைக்கதை அமைத்து இணைய தொடராக இயக்குகிறார்.
பேட்டி
இதற்கான செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய சோனா "ஸ்மோக் இணைய தொடரில் தன்னுடைய வாழ்வில் நடந்த 99% சம்பவங்களை காட்சிகளாக அமைக்க உள்ளேன். அதில் நான் அனுபவித்த வலி, வாங்கிய அடி, தன்னுடைய காதல் என அனைத்து விஷயங்களையும் சொல்ல இருக்கிறேன்.
அனைவரும் என்னை கவர்ச்சி நடிகை என்று அழைத்தது பெரும் வலியை கொடுத்தது. வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால், கவர்ச்சி நடிகை என்று அழைத்ததன் காரணமாக எனக்கு கல்யாணம் கூட ஆகவில்லை.
திரைப்படத்தில் நடிப்பவள்தானே அவள் அப்படித்தான் என்று கூறினார்கள். ஆனால் நான் சாதாரண ஒரு பெண்தான், சமைப்பேன், வீட்டு வேலை அனைத்தையும் செய்வேன் இருந்தாலும் எனக்கு திருமணம் ஆகவில்லை. இதற்கு காரணம் என் மீது இருந்த கவர்ச்சி நடிகை என்ற பெயர்தான்" என சோனா தெரிவித்துள்ளார் .