மாணவிகளுக்கு பாலியல் தொல்லை : தலைமறைவான தாளாளர்.. தட்டி தூக்கிய காவல்துறை

By Irumporai Nov 25, 2022 02:40 AM GMT
Report

பிளஸ்-2 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் தலைமறைவாக இருந்த தாளாளர் வினோத்தை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

மாணவிக்கு பாலியல் தொல்லை

ஆவடியை அடுத்த திருநின்றவூரில் உள்ள தனியார் பள்ளியின் தாளாளர் வினோத். இவர் அந்த பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவமாணவிகள், வகுப்புகளை புறக்கணித்து தங்களது பெற்றோருடன் பள்ளியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை : தலைமறைவான தாளாளர்.. தட்டி தூக்கிய காவல்துறை | Sexually Harassed Private School Principal

இதையடுத்து பள்ளி தாளாளர் வினோத் மீது 4 பிரிவுகளின் கீழ் திருநின்றவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு மாணவமாணவிகள் மற்றும் பெற்றோர்கள் என அனைவரும் கலைந்து சென்றனர்.

காவல்துறை வழக்குப்பதிவு

மேலும் அந்த பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. திருநின்றவூர் போலீசார், பள்ளி தாளாளர் வினோத் மீது போக்சோ சட்டத்தின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தலைமறைவாக இருந்த அவரை தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.

கோவாவில் கைது

பாலியல் புகாரில் சிக்கிய பள்ளி தாளாளர் வினோத் பூச்சி மருந்து அருந்திய படி கதறி அழுது வீடியோ ஒன்றை வெளியிட்ட நிலையில், பாலியல் தொல்லை புகாரில் தலைமறைவாக இருந்த பள்ளி தாளாளர் வினோத்தை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவாவில் தலைமறைவாக இருந்த வினோத்தை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்