சுட்டுக் கொல்லணும் - பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமியின் தாய் கண்ணீர்
8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கில் குற்றவாளியின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
பாலியல் வன்கொடுமை
திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுமி, தனது பாட்டி வீட்டில் தங்கி அப்பகுதியில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார்.
சம்பவத்தன்று பள்ளி முடிந்து சிறுமி வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சிறுமி தனியாக செல்வதை நோட்டமிட்ட நபர் ஒருவர், சிறுமியின் வாயை கைகளால் பொத்தி அருகே இருந்த மாந்தோப்புக்குள் தூக்கி சென்றார்.
பின், அங்கு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதனையடுத்து, சிறுமி நடந்த சம்பவம் குறித்து உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் போலீஸில் புகாரளித்த நிலையில்,
கதறும் தாய்
பாலியல் தொல்லை கொடுத்த நபரை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். இதற்கிடையில் சிறுமி வீட்டுக்கு சென்றபோது மர்ம நபர் மாந்தோப்புக்கு தூக்கி செல்லும் கண்காணிப்பு கேமரா காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்நிலையில், என் பிள்ளைய அடிச்சு, வாய் எல்லாம் ரத்தம் வர வெச்சு பாலியல் வன்கொடுமை செய்திருக்கான். எனது மகளுக்கு ஏற்பட்டதுபோல வேறு யாருக்கும் நிகழக்கூடாது. எனது மகளை இந்த நிலைக்கு ஆளாக்கிய நபரை சுட்டுக்கொல்ல வேண்டும் என தாய் கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார்.
குற்றவாளியை கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வரும் நிலையில் தற்போது புதிய புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.