ராஜேஷ்தாஸ் மீதான பாலியல் புகார்: விசாரணை அதிகாரி நியமனம்
india
police
tamilnadu
By Jon
சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் மீதான பாலியல் புகாரை விசாரிக்க விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக சிறப்பு டி.ஜி.பி.யாக பணிபுரிந்து வந்த ராஜேஷ்தாஸ் மீது பெண் போலீஸ் சூப்பிரண்டு அளித்த பாலியல் புகார் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து ராஜேஷ்தாஸை டிஜிபி பொறுப்பிலிருந்து விடுவித்ததுடன், புகாரை பற்றி விசாரிக்க விசாரணை கமிட்டியை அமைத்துள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில், இன்று பிற்பகல் சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து ராஜேஷ்தாஸ் மீதான வழக்கை விசாரிக்கிறது.
மேலும் விசாரணை அதிகாரியாக சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.