கால்நடைக்கு புல் அறுக்க சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..!

Sexual harassment Uttar Pradesh
By Thahir Aug 01, 2022 08:58 AM GMT
Report

கால்நடைக்கு புல் அறுக்க சென்ற பெண்ணை வழிமறித்த இளைஞர்கள் துப்பாக்கி முனையில் ஆடைகளை கலைந்து அத்துமீறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண்ணிடம் அத்துமீறல் 

உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்டம் கோட்வாலி பகுதியில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 30 வயது பெண். இவர் நேற்று மாலை கால்நடைகளுக்கு புல் அறுக்க வயலுக்கு சென்றுள்ளார்.

அப்போது அவரை பின்தொடர்ந்து சென்ற அப்பகுதியைச் சேர்ந்த 7 பேர் வயலுக்கு செல்லும் காட்டுப்பகுதியில் வழியில் இடைமறித்துள்ளனர்.

அவர்கள் வைத்திருந்த கைத்துப்பாக்கியை கொண்டு மிரட்டி அப்பெண்ணின் ஆடைகளை கலைந்து அத்துமீறியுள்ளனர்.

கால்நடைக்கு புல் அறுக்க சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..! | Sexual Harassment Of Women

7 பேர் அதிரடி கைது 

இதை வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். அந்த கும்பலிடமிருந்து தப்பித்த அந்த பெண் தனது குடும்பதினரிடம் நடந்த சம்பவத்தை எடுத்துக் கூறியுள்ளார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெண்ணின் குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் அப்பகுதியைச் சேர்ந்த அனுஜ், குல்தீப், அங்கித், ரவி, ரிஸ்வான், சோட்டா, அப்துல் உள்ளிட்ட 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.