பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை - அ.தி.மு.க. நிர்வாகி செய்த கொடூர செயல்!
அ.தி.மு.க. நிர்வாகி ஒருவர் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அ.தி.மு.க. நிர்வாகி
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் உள்ள பண்ணவயல் கிராமத்தைச் சேர்ந்த புஷ்பநாதன் மகன் தீபன்(வயது 33).இவர், தஞ்சை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி இணைச்செயலாளராக உள்ளார். இந்த நிலையில் தீபன் அதே பகுதியைச் சேர்ந்த அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
மேலும் தனக்கு நேர்ந்த சம்பவத்தை அழுதுக்கொண்டே தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இதுகுறித்து அந்த மாணவி பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
பாலியல் வன்கொடுமை
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தீபனிடம் விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் தீபனை கைது செய்து பட்டுக்கோட்டை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
அ.தி.மு.க. நிர்வாகி ஒருவர் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.