மகளிர் ஆணைய தலைவிக்கே பாலியல் தொல்லை - காரில் இழுத்துச் சென்ற கொடூரம்!
மகளிர் ஆணைய தலைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகளிர் ஆணைய தலைவி
டெல்லி மகளிர் ஆணைய தலைவராக இருப்பவர் ஸ்வாதி மாலிவால். இவருக்கு கார் ஓட்டுனர் ஒருவர் மதுபோதையில் அவரிடம் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ஸ்வாதி மாலிவால் தனது ட்விட்டர் பதிவில்,”நேற்றிரவு டெல்லியில் பெண்களின் பாதுகாப்பு சூழல் பற்றி ஆய்வு செய்வதற்காக சென்றேன்.

அப்போது, குடிபோதையில் இருந்த கார் ஓட்டுனர் ஒருவர் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். அவரை பிடிக்க முயன்ற போது, காரின் ஜன்னலில் எனது கையை சிக்க வைத்து விட்டு, காருடன் என்னை இழுத்து சென்றார்.
பாலியல் தொல்லை
டெல்லியில் மகளிர் ஆணைய தலைவரே பாதுகாப்புடன் இல்லை எனும்போது, சாதாரண பெண்களின் நிலைமையை கற்பனை செய்து பாருங்கள்,” என தெரிவித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து இதுபற்றி பேசிய டெல்லி போலீஸ் அதிகாரி, குடிபோதையில் இருந்த கார் ஓட்டுனர்
ஹரீஷ் சந்திரா (47) என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளதாக கூறியுள்ளார்.