சில்மிஷத்தில் ஈடுபட்ட நபரை மனைவி கண் முன்னே அடித்து துவம்சம் செய்த கணவர் - வைரலாகும் வீடியோ
குண்டூர் மாவட்டத்தில் பிற்படுத்தோர் நலச் சங்கத் தலைவராக ரங்கநாத் என்பவர் பணியாற்றி வந்துள்ளார்.
இவர் சங்கத்தில் இருக்கும் பெண் உறுப்பினர்களிடம் அடிக்கடி பணம் வாங்குவதை வழக்கமாக வைத்துள்ளார்.
பெண்களிடம், ரங்கநாத் வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்காமல் இருந்து வந்துள்ளார்.
மேலும், சங்கத்தில் இருக்கும் பெண் உறுப்பினர்களிடம் அவர் தகாத முறையில் நடந்துள்ளார். இதில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தன் கணவரிடம் இது குறித்து கூறியுள்ளார். மனைவி கண் முன்னே ரங்நாத்தை கணவர் சராமரியாக தாக்கி வெளுத்து வாங்கினார்.
அடி தாங்க முடியாமல் ரங்நாதன் அய்யோ... அம்மா.. என்று கத்தி அலறினார். இதன் பின்னர், இது குறித்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.
இதனையடுத்து, ரங்கநாத் மீது 2 காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் பிற்படுத்தோர் நல சங்கத் தலைவர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். தற்போது, இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.