மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அப்பா; கதறிய தாய் - அதிர்ச்சி சம்பவம்!
மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெண்ணின் இரண்டாவது கணவர் போக்ஸோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் தொல்லை
திண்டுக்கல் மாவட்டம் மீனாட்சிபுரத்தை சேர்ந்த தம்பதியினருக்கு 11 மற்றும் 9 வயதில் குழந்தைகளில் உள்ளனர். அவரின் கணவர் ஒரு குடும்ப பிரச்சனையில் மனைவியை விட்டு பிரிந்துள்ளார். இதனால் தயார் ஹோட்டலில் வேலை செய்து தனது இரண்டு குழந்தைகளையும் வளர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் வேலை பார்க்கும் இடத்தில் பரோட்டா மாஸ்டர் அரிகிருஷ்ணராஜூ என்பவரோடு பழக்கம் ஏற்பட்டு அவரை இரண்டாவது கணவராக திருமணம் செய்துள்ளார்.
பின்னர் அவர்கள் நான்கு பெரும் திருப்பூர் பல்லடம் கொசுவம் பாளையத்தில் வாடகை வீட்டில் வசித்தது வந்துள்ளனர். அப்போது தாயார் வீட்டில் இல்லாத நேரத்தில் 9 வயது சிறுமியிடம் செல்போனை கொடுத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் கோவம் அடைந்த மனைவி தனது இரண்டாவது கணவரை வீட்டில் இருந்து வெளியேற்றியுள்ளார். ஆனால் அந்த நபர் மறுபடியும் தாயார் இல்லாத நேரத்தில் வீட்டில் புகுந்து மற்றொரு சிறுமிக்கும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
போக்ஸோவில் கைது
இதன் காரணமாக தனது 11 வயது மகளை தேனீ மாவட்டம் ஜி.கல்லுப்பட்டி ஆர்.டி.யூ. சிறுவர் குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்து படிக்க வைத்துள்ளார். அப்போது அந்த சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
அப்போது காப்பக மேலாளர் ஜெயராணி சிறுமியிடம் விசாரித்த போது, சிறுமி அரிகிருஷ்ணராஜூவால் பாலியல் தொல்லைக்கு ஆளானது தெரியவந்துள்ளது.