பிரபல பாடகர் வேடன் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்த பெண் மருத்துவர்
பாடகர் வேடன் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
பாடகர் வேடன்
கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில், 'குத்தந்திரம்' பாடல் மூலம் பிரபலமானவர் பாடகர் வேடன்.
இதை தொடர்ந்து, இயக்குநர் விஜய் மில்டன் இயக்கும் புதிய திரைப்படத்தின் மூலம் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் வேடன்.
முன்னதாக 2021ஆம் ஆண்டு மீ டூ விவகாரத்தின் போதே, இவர் மீது பாலியல் புகார் எழுந்தது. ஆனால் அப்போது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.
இதை தொடர்ந்து, கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார். அதன் பின்னர், சிறுத்தைபல் அணிந்திருந்ததாக மற்றொரு வழக்கில் வனத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார்.
பாலியல் வன்கொடுமை
இந்நிலையில், வேடன் தன்னுடன் பாலியல் வன்கொடுமை செய்ததாக கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரில், "வேடனின் ரசிகையான நான் மருத்துவராக உள்ளேன். வேடனுடன் எனக்கு சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.
கடந்த 2021 முதல் 2023 ஆம் ஆண்டு வரை என்னிடம் அடிக்கடி பணம் பெற்றதுடன், திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்தார். தற்போது வேறு பெண்களுடன் பேச அனுமதிப்பதில்லை என கூறி பிரேக் அப் செய்து விட்டார்" எனத் தெரிவித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில், கொச்சி திருக்காக்கரா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.