பெண் எஸ்.பி-க்கு பாலியல் தொந்தரவு : மாயமான ஆவணங்கள் அதிர்ச்சியடைந்த நீதிபதி
பெண் எஸ்.பி-க்கு பாலியல் தொந்தரவு வழக்கில் முக்கிய ஆவணங்கள் மாயமான சமபவம் அதிர்ச்சியினை ஏர்படுத்தியுள்ளது.
ராஜேஷ் தாஸ்
கடந்த ஆண்டு காவல்துறையில் சிறப்பு டிபிபியாக பணியாற்றி வந்த ராஜேஷ் தாஸ் என்பவர், பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பெண் எஸ்பி ஒருவர் புகார் அளித்திருந்தார்.
இதனை எடுத்து சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மற்றும் அவர் உதவிய செங்கல்பட்டு எஸ்.பி கண்ணன் ஆகி இருவரும் பணியினை நீக்கம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் சிபிசிஐடி போலீசார் இந்த பாலியல் புகார் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.
காணமல் போன ஆதாரங்கள்
இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்கு விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து ராஜேஷ் தாஸ் மற்றும் கண்ணன் ஆகியோர் மீது ஆயிரம் பக்கங்களை கொண்ட குற்ற பத்திரிகையை விழுப்புரம் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் தாக்கல் செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணை கடந்த ஒரு வருடமாக விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், முன்னாள் சிறப்பு டிஜிபி பெண் எஸ்பி இடையே நடந்த உரையாடல் பதிவு, வாட்ஸ் அப் மெசேஜ் ஆவணம் மாயமானதால் நீதிபதி புஷ்பராணி அதிர்ச்சி அடைந்துள்ளார்.
மேலும் காணாமல் போன ஆவணங்களை வரும் 25-ஆம் தேதிக்குள் மீண்டும் தாக்கல் செய்யுமாறு சிபிசிஐடி-க்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.