11 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வாலிபர் 2-வது முறையாக போக்சோ சட்டத்தின் கீழ் கைது
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த அருங்குணம் கிராமத்தில் 11 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
வந்தவாசியை அடுத்த அருங்குணம் கிராமத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமி தனது தாயுடன், சத்தியவாடி கிராமத்தில் கூத்து பார்ப்பதற்கு சென்றுள்ளார். அப்போது, அருங்குணம் கிராமத்தைச் சேர்ந்த கட்டிட வேலை செய்யும் சதீஷ் என்பவர், சிறுமியை அருகே உள்ள விவசாய நிலத்திற்கு கூட்டிச் சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளார். அப்போது, அந்த வழியாகச் சென்ற சிலர் சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.
அப்போது, சதீஷ், சிறுமியை பாலியல் தொந்தரவு செய்து கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பொதுமக்கள் சதீஷுக்கு தர்ம அடி கொடுத்து, அவனிடமிருந்து சிறுமியை மீட்டனர்.
இதனையடுத்து, சிறுமியின் பாட்டி பொன்னம்மாள் வந்தவாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார், சதீஷ்ஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
சதீஷ் மீது கடந்த 2018ம் ஆண்டு வேறொரு சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த விவகாரத்தில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.