பாலியல் தொல்லையால் 12ஆம் வகுப்பு மாணவி - கடிதம் எழுதி வைத்துவிட்டு துாக்கிட்டு தற்கொலை
கரூர் அருகே 12ம் வகுப்பு மாணவி ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம், வெண்ணைமலையில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு பயின்று வரும் 17 வயது பள்ளி மாணவி நேற்று மாலை பள்ளி முடித்து வீடு திரும்பிய நிலையில், தனது வீட்டில் பெற்றோர்கள் இல்லாத நேரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்த வெங்கமேடு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மாணவியின் உடலை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தற்கொலைக்கான காரணம் குறித்து வெங்கமேடு காவல் நிலைய போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில் மாணவி எழுதி வைத்த கடிதத்தில் பாலியல் தொந்தரவு காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக மாணவி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது பின்னர் அந்த மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்கு பின் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவையில் பள்ளி மாணவி பாலியல் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட சம்வம் அடங்குவதற்குள் மீ்ணடும் ஒரு பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்வம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.