பாலியல் வழக்கு; துபாயில் இருந்து இந்தியா வரும் பிரபல நடிகர்..!
பாலியல் புகாருக்கு உள்ளான நடிகர் விஜய்பாபு துபாயில் இருந்து இந்தியா வர உள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
பாலியல் வன்கொடுமை வழக்கில் நடிகரும் தயாரிப்பாளருமான விஜய் பாபுவின் முன்ஜாமீன் மனுவை கேரள உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஒத்திவைத்தது.
இதற்கிடையில், விஜய் பாபு ஜூன் 1-ம் தேதி துபாயில் இருந்து இந்தியா வருவார் என்று அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
முன்னதாக, வழக்கறிஞர் திரு பாபு இந்தியா வரும் நடிகர் விஜய்பாபுவின் டிக்கெட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார், அதில் திங்கட்கிழமை இந்தியா வர உள்ளதாக அச்சிடப்பட்டிருந்தது.
முன்னதாக நடிகையின் புகாரின் பேரில் எர்ணாகுளம் தெற்கு போலீசார் விஜய் பாபு மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்தனர். அதன்பிறகு, ஃபேஸ்புக் மூலம் புகார்தாரரின் அடையாளத்தை வெளிப்படுத்தியதற்காக அவர் மீது மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது.