பாலியல் வன்கொடுமை செய்வது எப்படி? - டிவி ஷோவில் நிகழ்த்தி காட்டிய குற்றவாளி
ஐவரிகோஸ்ட் நாட்டில் பாலியல் வன்கொடுமையை டிவி ஷோவில் நிகழ்த்தி காட்ட ஆதரித்த டிவி நிகழ்ச்சி தொகுப்பாளருக்கு சிறைதண்டனை வழங்கப்பட்டது.
அந்நாட்டில் டிவி நிகழ்ச்சிகள் நடத்தி பிரபலமான யெவ்ஸ் டிஎம் பெல்லா நடத்திய ஒரு டிவி நிகழ்ச்சி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. காரணம் நிகழ்ச்சியில் பங்கேற்ற பாலியல் குற்றவாளி ஒருவர் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வதை நடித்துக் காட்டினார்.
அதனை கண்டிக்காமல் யெவ்ஸ் டிஎம் பெல்லா சிரித்து ரசித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அந்த குற்றவாளி ஒரு பொம்மையை தரையில் போட்டு பாலியல் வன்கொடுமை செய்வது போல நடிக்க இவர் உதவியுள்ளார்.
இவை அனைத்தும் நாட்டு மக்களிடையே பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 50 ஆயிரம் பேர் யெவ்ஸ் டிஎம் பெல்லாவுக்கு எதிராக கையெழுத்து போட்டு போராட்டம் நடத்தியதோடு இந்த சம்பவம் தொடர்பாக வழக்கும் தொடரப்பட்டது.
இதில் யெவ்ஸ் டிஎம் பெல்லாவுக்கு 12 மாதம் சிறைத்தண்டனை விதித்து அபித்ஜான் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. மேலும் நிகழ்ச்சியில் தோன்றிய கற்பழிப்பு குற்றவாளிக்கு 24 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.