நடிகையை பலாத்காரம் செய்த விவகாரம் - நடிகர் விஜய் பாபுவுக்கு ஆண்மை பரிசோதனை - போலீஸ் அதிரடி
நடிகர் விஜய் பாபு
மலையாளத்தில் பிரபல நடிகராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் நடிகர் விஜய் பாபு. இவர் மீது இளம் நடிகை ஒருவர் பாலியல் புகார் கொடுத்துள்ள நிலையில், மற்றொரு பெண் புகார் கொடுத்துள்ள சம்பவம் கேரளா சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மலையாளத்தில் பல வெற்றி படங்களை கொடுத்துள்ள நடிகர் விஜய் பாபு, ஃபிரைடே ஃபிலிம் ஹவுஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இவருடைய ‘பிலிப்ஸ் அண்ட் தி மங்கி பென்’ என்ற படம் கேரளா மாநிலத்தின் சிறந்த திரைப்பட விருதை வென்றது.
பரபரப்பு புகார்
கடந்த ஏப்ரல் 22-ம் தேதி நடிகர் விஜய் பாபு மீது, இளம் நடிகை ஒருவர் போலீசில் பாலியல் புகார் அளித்தார். இந்த புகார் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த புகாரில், விஜய்பாபு தன்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், தனக்கு பட வாய்ப்பு தருவதாக கூறி தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் தெரிவித்தார்.
பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையில், அவர் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க அவருக்கு லுக் அவுட் நோட்டீசும் பிறப்பிக்கப்பட்டது.
தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றத்தை தனது ஃபேஸ்புக் லைவ்வில் வந்து நடிகர் விஜய் பாபு மறுப்பு தெரிவித்தார். நடிகை தொடர்ந்திருக்கும் வழக்கை எதிர்த்து மான பங்க வழக்கு தொடுக்க போகிறேன் என்று பேசினார்.
இந்த வழக்கை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன் என்றும் விஜய் பாபு கூறியிருந்தார். இதனிடையே பாதிக்கப்பட்ட நடிகை கடந்த வாரம் விஜய் பாபு மீது மேலும் ஒரு பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார்.
கைது
இந்த வழக்கை வாபஸ் பெற்றால் 1 கோடி ரூபாய் தருவதாக விஜய்பாபு தரப்பிலிருந்து தன்னிடம் பேரம் பேசப்பட்டதாக கூறி பகீர் கிளப்பினார்.
கடந்த 27ம் தேதி விசாரணைக்காக ஆலுவா போலீஸ் கிளப்பிற்கு வந்த விஜய் பாபுவை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆண்மை பரிசோதனை
நடிகை பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறிய அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் ஹோட்டல் அறைகளுக்குச் சென்று விசாரணை நடத்தினர். அன்று மாலையே அவருக்கு ஜாமீன் கொடுக்கப்பட்டது.
வரும் ஜூலை 3ம் தேதி வரை விஜய்பாபு நேரில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் போலீசார் தெரிவித்திருக்கின்றனர்.
இந்நிலையில், விஜய் பாபுக்கு ஆண்மை பரிசோதனை செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
இன்று அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ஆண்மை பரிசோதனை செய்யப்பட உள்ளது.