பள்ளி மாணவனிடம் பாலியல் வன்கொடுமை செய்த கல்லூரி மாணவர்கள் - கொடூரச் சம்பவம்
பள்ளி மாணவனையே, கல்லூரி மாணவர்கள் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம், திட்டக்குடியைச் சேர்ந்த 11ம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவன், கடந்த மாதம் 19ம் தேதி கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் அருகே விளையாடிக் கொண்டிருந்தான்.
அப்போது, வடகராம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவன் மனோஜ் என்பவன், அவனுடைய நண்பர்களுடன் சேர்ந்த 11ம் வகுப்பு படிக்கும் மாணவனை அழைத்தனர்.
இவர்கள் அழைப்பை கேட்டு வந்த அந்த மாணவனிடம் இவர்கள் அருவருக்கத்தக்க வகையில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இவர்கள் பிடியிலிருந்து தப்பிக்க முயற்சி செய்த அந்த மாணவனை அடித்து, மறுபடியும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனால், அந்த மாணவன் கத்தி கூச்சல் போட்டுள்ளான்.
இவனது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வர, அந்த 3 பேரும் மாணவை விட்டுவிட்டு ஓடினர். இது குறித்து, அந்த மாணவின் தந்தை ராமநத்தம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் அந்த 3 பேரையும் வலை வீசித் தேடி வந்தனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த மூன்று பேரில் மனோஜ் என்பவன் வடகராம்பூண்டி பகுதியில் சுற்றித் திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, மனோஜை மடிக்கிப் பிடித்த போலீசார் அவனிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், மனோஜ் குற்றத்தை ஒப்புகொண்டதையடுத்து, அவனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
கைதான மனோஜ் மீது ஏற்கெனவே மூதாட்டியை கொலை செய்த வழக்கு, கர்ப்பிணிப் பெண்ணை தாக்கிய வழக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.