சிறுமி கொடுத்த பாலியல் வன்கொடுமை புகார் - நேபாளம் திரும்புகிறார் வீரர் சந்தீப் லமிச்சானே...!

Cricket Sexual harassment
By Nandhini Oct 06, 2022 05:42 AM GMT
Report

நேபாள கிரிக்கெட் அணிக்காக விளையாடியவர்தான் சந்தீப் லமிச்சனே. இவர் 30 சர்வதேச ஒரு நாள் போட்டி மற்றும் 44 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

பாலியல் பலாத்காரம் புகார் 

இந்நிலையில் சந்தீப் லாமிச்சானே மீது 17 வயது சிறுமி ஒருவர் போலீசிடம் பாலியல் பலாத்காரம் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில், நண்பர் ஒருவர் மூலம் சந்தீப்பின் எனக்கு அறிமுகமானார். இதனையடுத்து, ஆகஸ்ட் 21ம் தேதி காத்மாண்டு ஹோட்டலில் என்னை அழைத்துக் கொண்டுச் சென்று சந்தீப் எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து, இது தொடர்பாக வீரர் சந்தீப் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்பெண் பலாத்காரம் செய்யப்பட்டாரா என்று மருத்துவ பரிசோதனைகளும் நடந்து வருகிறது.

பிடிவாரண்ட்

இதற்கிடையில், சந்தீப்க்கு மாவட்ட நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்திருக்கிறது. கடந்த மாதம் கரபியன் பிரிமியர் லீக் தொடரில் சந்தீப் பங்கேற்பதற்காக சென்றுள்ளார். சந்தீப் கரபியன் பிரிமியர் லீக் தொடரில் பங்கேற்று நாடு திரும்பப்படும் போது அவர் கைது செய்யப்படலாம் என்று சொல்லப்படுகிறது.

இதனையடுத்து நேபாளம் கிரிக்கெட் வாரியம் சந்தீப் லமிச்சனேவை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. முழு விசாரணை முடியும் வரை அவரை சஸ்பெண்ட் செய்துள்ளது.

sandeep-lamichhane

சந்தீப் லமிச்சனே வேதனை

இது குறித்து சந்தீப் லமிச்சனே கடந்த மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், தன் மீது சுமத்தப்பட்ட பாலியல் பலாத்கார புகார் காரணமாக தான் மிகுந்த மன வேதனை அடைந்துள்ளேன். நான் மருத்துவ சிகிச்சையில் உள்ளேன். விரைவில் நலம் பெற்று நேபாளம் திரும்பி குற்றச்சாட்டுகளை பொய் என நிரூபிப்பேன். விசாரணையின் அனைத்து நிலைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிப்பேன். நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்க சட்டப் போராட்டம் நடத்துவேன் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், கிரிக்கெட் வீரர் சந்தீப் லமிச்சானே விசாரணைக்காக இன்று 10 மணிக்கு நேபாளம் திரும்புகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.