சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் - அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்

sexual-abuse முதியவர் கைது சிறுமி பாலியல்வன்கொடுமை old-man-arrest court-action நீதிமன்றம் தீர்ப்பு
By Nandhini Apr 06, 2022 09:01 AM GMT
Report

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர் ஒத்தையால் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவர் கடந்த 2019ம் ஆண்டு 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. போலீசார் போக்சோ நீதிமன்றத்தில் குற்றம் தொடர்பான ஆவணங்களை சமர்பித்தனர்.

இந்நிலையில், வழக்கு நீதிபதி தனசேகரன் சுந்தராஜு முன்பு விசாரணைக்கு வந்தது. சிறுமி பாலியல் வன்கொடுமை தொடர்பாக சுந்தர்ராஜூக்கு நீதிபதி ஆயுள் தண்டனை வழங்கினார்.

மேலும், ரூ.1000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு 10 லட்ச ரூபாய் நஷ்டஈடு வழங்க உத்தரவிட்டுள்ளார். 

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் - அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் | Sexual Abuse Old Man Arrest Court Action