பெற்ற மகளிடம் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரத் தந்தை - சைல்டு ஹெல்ப் லைன்னுக்கு போன் செய்த மகள்
திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சரவணன் (42). இவர் தன்னுடைய மகளை நீண்ட மாதங்களாக பாலியல் சீண்டல் செய்து வந்துள்ளார். இதனால், அந்தச் சிறுமி மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.
வெளியில் சொன்னால் தந்தை ஏதாவது செய்து விடுவாரோ என்று அஞ்சிய அச்சிறுமி யாரிடமும் இந்த விஷயத்தை கூறாமல் கண்கலங்கி தவித்து வந்துள்ளார்.
இதனையடுத்து, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அமர் குஷ்வாஹா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் பாலியல் சீண்டல் குறித்து தகவல் தெரிவிக்க சைல்டு ஹெல்ப் லைன் 1098 எண் உள்ளது என்ற விழிப்புணர்வை கடந்த சில நாட்களாக ஏற்படுத்திக் கொண்டு வருகிறார்கள்.
இதைக் கேள்விப்பட்ட அச்சிறுமி அந்த சைல்டு ஹெல்ப் லைனுக்கு போன் செய்து, தன்னுடைய தந்தை செய்த செயல்களை கூறி அழுதுள்ளார்.
இதனையடுத்து, சைல்ட் ஹெல்ப் லைன் அலுவகத்திலிருந்து திருப்பத்தூர் மகளிர் காவல் நிலைய ஆய்வாளருக்கு தகவல் பறந்தது.
இதனையடுத்து, உடனடியாக திருப்பத்தூர் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கௌரி, சரவணனை கைது செய்தனர். சரவணனிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
அப்போது, போதையில் என் மகளிடம் நான் பாலியல் சீண்டல் செய்வேன் என்று குற்றத்தை ஒப்புக்கொண்டார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் சரவணனை சிறையில் அடைத்தனர்.