விருந்தாளியாக வந்த பெண்ணிடம் பாலியல் வன்கொடுமை செய்து தாக்கிய கரு.நாகராஜன் உதவியாளர் கைது - பரபரப்பு சம்பவம்
சென்னை மீனம்பாக்கம் அடுத்த பழவந்தாங்கல் பக்தவத்சலம் நகரைச் சேர்ந்தவர் பவன். இவர் ஐடி நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார்.
ஐடியில் வேலை பார்த்துக் கொண்டே, தமிழக பாஜகவின் பொதுச் செயலாளர் கரு. நாகராஜனுக்கு இந்தி மொழிபெயர்ப்பாளராகவும் அலுவலக உதவியாளராகவும் இருந்து வருகிறார்.
இந்நிலையில், மும்பையைச் சேர்ந்த 27 வயது பெண் ஒருவர் சென்னையில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். வேலைக்காக இவர் பவன் வீட்டிற்கு விருந்தினராக வந்துள்ளார்.
இதனையடுத்து கடந்த 2 ஆண்டுகளாக பவன் இருக்கும் வீட்டில் மேல் தளத்தில் அப்பெண் தங்கியிருக்கிறார். இந்நிலையில், அப்பெண்ணை தனது அறைக்கு வருமாறு பவன் அழைத்துள்ளார். கீழே வந்த அப்பெண்ணை வீட்டை சுத்தம் செய்யும்படி கூறியுள்ளார். ஆனால், அதற்கு அப்பெண் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த பவன் அப்பெண்ணின் மேலாடையை கிழித்து சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தோள்பட்டை , மார்பு என்று பல இடங்களில் கைகளால் சரமாரியாக தாக்கியுள்ளார். ஆபாசமாக திட்டி அப்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இதனால், அப்பெண் அலறி துடித்து, கத்தி கூச்சல் போட்டுள்ளார். இவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் வீட்டிற்கு ஓடி வந்துள்ளனர். அப்போது, அப்பெண்ணை பவனிடமிருந்து மீட்டு, போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பவனை கைது செய்தனர். இதனையடுதது, பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் பவனை சிறையில் அடைத்துள்ளனர்.