2 வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரத் தந்தை - நெஞ்சை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்
தனக்கு பிறக்கவில்லை என்ற சந்தேகம்! 2 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை இந்த குழந்தை எனக்கு பிறக்கவில்லை என்று சந்தேகப்பட்ட தந்தை, ஆத்திரத்தில் 2 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரத்தைச் சேர்ந்த நபரின் மனைவிக்கு கடந்த 2018ம் ஆண்டு பெண் குழந்தை, தன்னுடைய சாயலில் இல்லை என்று தினமும் குடித்து வந்து தன் மனைவியை சித்ரவதை செய்து வந்துள்ளார்.
இதனால், மனைவிக்கும், கணவருக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது. மனைவியை எப்போதும் சந்தேகப்பட்டு வந்த அந்த நபர் அந்தக் குழந்தையை பார்க்கும் போதெல்லாம் எரிச்சலைடைந்து வந்துள்ளார்.
இந்நிலையில், இரண்டு வயதான அக்குழந்தையிடம் ஆத்திரத்தில் அந்த நபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். குழந்தை நிறுத்தாமல் அழுதுகொண்டிருந்ததால், சந்தேகமடைந்த மனைவி குழந்தையை பரிசோதனை செய்துள்ளார். கணவன், பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்ததை தாங்கிக்கொள்ள முடியாத மனைவி போலீசில் புகார் கொடுத்தார்.
இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து அந்த நபரை கைது செய்துள்ளனர். இதனையடுத்து, திருவனந்தபுரம் அதிவிரைவு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
இவ்வழக்கு விசாரணையில் 13 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டதால், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.