மூதாட்டியிடம் பாலியல் வன்கொடுமை செய்த 16 வயது சிறுவன் - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு - பரபரப்பு சம்பவம்
இங்கிலாந்தில் 16 வயது சிறுவன் மூதாட்டியிடம் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இங்கிலாந்தில் நியூ கேஸ்லே பகுதியைச் சேர்ந்த 79 வயது மூதாட்டி. இவர் தன்னுடைய வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார். இதை, ரொம்ப நாட்களாக 16 வயது சிறுவன் நோட்டமிட்டு வந்துள்ளான்.
இதனையடுத்து, அந்தச் சிறுவன் திருட்டு தனமாக வீட்டிற்குள் நுழைந்துள்ளான். பின்னர், மூதாட்டியை பின்னால் இருந்து தாக்கி கழுத்தில் கத்தி வைத்து பணம் கேட்டு மிரட்டி இருக்கிறான்.
மூதாட்டி பணம் இல்லை என்று கூறியுள்ளார். இதனையடுத்து கோபம் அடைந்த சிறுவன், மூதாட்டியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டிருக்கிறான். இதனால், மூதாட்டி கூச்சல் போட்டு கத்தியுள்ளார். இதனால், பயந்து போன அச்சிறுவன் அவரை கீழே தள்ளிவிட்டு தப்பித்து ஓடி விட்டான்.
பின்னர், அந்த மூதாட்டி இது குறித்து போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, அந்த விசாரணையில், சிறுவனின் பெயர் Reece Wigglesworth என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவனை கைது செய்து விசாரணை நடத்திய போலீசார், அவனிடமிருந்து பல திடுக்கிடும் தகவல் வெளியானது.
அந்தச் சிறுவன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ஒரு மாற்றுத்திறனாளி பெண்ணிடம் கத்தி காட்டி வழிபறியில் ஈடுபட்டு, பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து, போலீசார் அவன் மீது வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அச்சிறுவனுக்கு 8 ஆண்டு சிறை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
