தாய் கண் முன் சிறுமியின் தலையை துண்டித்து கொலை செய்த குற்றவாளிக்கு தூக்கு தண்டனை - சேலம் நீதிமன்றம் அதிரடி

Attempted Murder Sexual harassment
By Nandhini Apr 26, 2022 07:23 AM GMT
Report

சேலம் மாவட்டம், ஆத்தூர் தளவாய்ப்பட்டியைச் சேந்தவர் சாமிவேல். இவரின் மனைவி சின்னப்பொண்ணு. இவர்களுக்கு ராஜலட்சுமி என்ற 13 வயது மகள் இருந்தாள். இவர்கள் வீட்டுக்கு பக்கத்தில் வசித்தவர் தினேஷ்குமார் (26). இவரின் மனைவி சாரதா.

இவர்களுக்கு 3 வயதில் ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில், கடந்த 2018ம் ஆண்டு தினேஷ்குமார் சிறுமி ராஜலக்ஷ்மி பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்தார்.

அச்சிறுமி இவரது ஆசைக்கு இணங்க மறுத்ததால் தாய் கண் எதிரிலேயே தினேஷ்குமார் அச்சிறுமியின் தலையை கொடூரமாக வெட்டி படுகொலை செய்தார். இவ்வழக்கில் தினேஷ்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

இதனையடுத்து, தினேஷ் குமார் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கு சேலம் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இன்று இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

தாய் கண் எதிரிலேயே சிறுமியின் தலையை கொடூரமாக வெட்டி படுகொலை செய்த குற்றத்திற்காகவும், பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காகவும், குற்றவாளி தினேஷுக்கு போக்ஸோ நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 

தாய் கண் முன் சிறுமியின் தலையை துண்டித்து கொலை செய்த குற்றவாளிக்கு தூக்கு தண்டனை - சேலம் நீதிமன்றம் அதிரடி | Sexual Abuse 13 Year Old Girl Murder