13 வயது மகளை கர்ப்பமாக்கி பிரசவம்... - தந்தை போக்சோ சட்டத்தின் கீழ் சிறையிலடைப்பு
பெற்ற மகளை கர்ப்பமாக்கி, பிரசவத்தற்கு அழைத்துச் சென்ற தந்தையை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம்
வேலூர் மாவட்டம், விருப்பாச்சிபுரத்தைச் சேர்ந்தவர் சங்கர் (45). இவர் கூலித் தொழில் செய்து வருகிறார். மனைவி இவருடன் சண்டையிட்டு பிரிந்து விட்டார். சங்கருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளார்கள். மகனுக்கு 15 வயதும், மகளுக்கு 13 வயதும் ஆகிறது. இரு பிள்ளைகளையும் சங்கர்தான் கவனித்து வந்துள்ளார்.
இந்நிலையில், திடீரென்று 13 வயது மகள் வயிற்று வலி தாங்க முடியாமல் அலறி துடித்துள்ளாள். இதனையடுத்து, சிறுமியை அழைத்துச் சென்று சங்கர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள்
சிறுமிக்கு மருத்துவமனையில் பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுமி கர்ப்பமடைந்து, பிரசவ வலியால் துடிப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து, அச்சிறுமிக்கு மருத்துவர்கள் பிரவசம் பார்த்ததில், அவளுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
இதன் பிறகு, இது குறித்து வேலூர் சமூக நலத்துறைக்கு டாக்டர்கள் தகவல் கொடுத்தனர். இதை அறிந்த வேலூர் சமூக நலத்துறையினர் மருத்துவமனைக்கு வந்து விசாரணை நடத்தினர்.

தந்தை சிறையிலடைப்பு
அப்போது, சிறுமியின் குழந்தைக்கு காரணம் தந்தை சங்கர்தான் என்பது விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து, வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
இந்த புகாரின் பேரில், தந்தை சங்கர் மீது கோக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர், சங்கரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
பெற்ற தந்தையே மகளைக் கர்ப்பமாக்கி, குழந்தை பெற்றெடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.