பல பெண்களுக்கு காதல் வலைவீசிய காவலர் மீது மனைவி புகார்!

Police Madurai Sex Harassment
By Thahir Jun 21, 2021 10:53 AM GMT
Report

மதுரை நாராயணபுரம் சிவமணி தெருவைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான சுபாஷினி மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் முத்துசங்கு என்ற காவலருடன் கடந்த 08.09-2019 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது.

பல பெண்களுக்கு காதல் வலைவீசிய  காவலர் மீது மனைவி புகார்! | Sexharssment Madurai Police

முத்து சங்கு சார்பு ஆய்வாளராக பணிபுரிவதாக பொய் சொல்லி சுபாஷினியை திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. திருமணத்தின் போது வரதட்சணையாக ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் 25 பவுன் தங்க நகைகள் பெண் வீட்டின்சார்பாக கொடுக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து திருமணமான 3 மாதத்தில் மேலும் வரதட்சணை பணம் கேட்டு சுபாஷினியை கொடுமைப் படுத்தியதாக தெரியவருகிறது, இதனைத் தொடர்ந்து இருவரும் பிரிந்து தனித்தனியாக இருந்துள்ளனர்.

பல பெண்களுக்கு காதல் வலைவீசிய  காவலர் மீது மனைவி புகார்! | Sexharssment Madurai Police

மேலும் காவலர் முத்துசங்கு மீது தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு புகார் செய்யப்பட்டது. ஆனால் முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு பாதுகாப்பு பணியில் இருப்பதாக கூறி புகாருக்கு பதில் கூறாமல் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் மீண்டும் காவலர் முத்து சங்கு தனது பெற்றோருடன் கடந்த பத்து தினங்களுக்கு முன்பு பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை நம்பி கணவருடன் சென்ற சுபாஷினியை பல்வேறு வகையில் பாலியல் துன்புறுத்தல் செய்து உள்ளார்.

அவரது மொபைல் போனை சுபாஷினி ஆய்வு செய்த போது பல பெண்களுடன் ஆபாசமாக பேசியது, ஆபாசமாக மெசேஜ் அனுப்பி தொடர்ந்து ஆபாசமான படங்களையும் வீடியோக்களையும் பல பெண்களுக்கு ஷேர் செய்து பேசி வந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

பல பெண்களுக்கு காதல் வலைவீசிய  காவலர் மீது மனைவி புகார்! | Sexharssment Madurai Police

இதனைத் தொடர்ந்து சுபாஷினி இன்று மதுரை மாநகர காவல் ஆணையரிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்தும் கணவர் முத்து சங்கு மீது தக்க நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.