ஆண்களைவிட பெண்களுக்கே பாலியல் உறவுக்கான துணை அதிகம்..!
ஆண்களைவிட பெண்களுக்கே பாலியல் துணை அதிகம் இருப்பதாக ஆய்வு குறிப்பில் தகவல் வெளியாகி உள்ளது.
தேசிய குடும்ப சுகாதார நல ஆய்வு
தேசிய குடும்ப நல ஆய்வை, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நடத்தி வருகிறது. கடந்த 1992 முதல் இதுவரை 4 ஆய்வுகள் நடத்தப்பட்டிருக்கின்றன.
இந்த வரிசையில், 2019 - 2021ம் ஆண்டுக்கான 5வது ஆய்வு, 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களில் உள்ள 707 மாவட்டங்களில் நடத்தப்பட்டிருக்கின்றன.

பாலியல் துணை
இந்நிலையில், தமிழ்நாடு, கேரளா உள்பட 11 மாநிலங்களில், ஆண்களை விட பெண்களுக்கு, ‘Sex Partners’ எனப்படும் பாலியல் உறவுக்கான துணைகள் அதிகம் இருப்பதாக தேசிய குடும்ப சுகாதார நல ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.
சுமார் 1.1 லட்சம் பெண்கள், ஒரு லட்சம் ஆண்களிடம் இது தொடர்பாக கேள்விகள் கேட்கப்பட்டதாக ஆய்வு குறிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.