பாலியல் குற்றவாளியே பெண்ணை திருமணம் செய்ய சொல்லவில்லை - தலைமை நீதிபதி விளக்கம்
சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற ஜாமின் வழக்கு விசாரணை ஒன்றில் பள்ளி மாணவியை பாலியல் வன்முறைக்குள்ளாகியவரே திருமணம் செய்து கொள்வாரா என தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே கேட்டிருந்தார். தலைமை நீதிபதியின் இந்தக் கருத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
மாணவியை பாலியல் வன்முறை செய்தவர் அரசு ஊழியர் என்பதும் அவர் அந்த மாணவியின் குடும்பத்தை மிரட்டி வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. உயர்நீதிமன்றம் அவருடைய ஜாமின் மனுவை நிராகரித்திருந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார்.
அந்த வழக்கு விசாரணையின்போது தான் பாதிக்கப்பட்ட பெண்னை திருமணம் செய்து கொள்ள சம்மதமா என எஸ்.ஏ.போப்டே கேட்டுள்ளார்.
இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில் அது தொடர்பாக எஸ்.ஏ.போப்டே விளக்கமளித்துள்ளார். தன்னுடைய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளார்.