காரில் பாலியல் உறவால் நோய்தொற்று! கார் நிறுவனத்திடம் நஷ்ட ஈடு கேட்ட பெண்?
அமெரிக்காவில் நோய் பாதித்த முன்னாள் காதலனுடன் காரில் பாலியல் உறவு வைத்ததில் நோய் தொற்று ஏற்பட்டதற்காக பெண் ஒருவர் கோரிய ரூ.40 கோடி காப்பீடு தொகை அவருக்கு கிடைக்க உள்ளது.
பாலியல் உறவு
அமெரிக்காவில் மிசோரி நகரம். இங்கு அந்தப் பெண்ணின் முன்னாள் காதலனுக்கு பாலியல் நோய்பாதித்திருக்கிறது. அவர் உறவு கொள்ளும் போது மிகுந்த பாதுகாப்புடன் உறவு கொள்ள வேண்டும்.
ஆனால் அதை எல்லாம் மறைத்து காதலியுடன் காருக்குள் பாலியல் உறவில் ஈடுபட்டு இருக்கிறார். இதனால் காதலனிடம் இருந்து காதலிக்கும் பாலியல் நோய் தொற்றிக் கொண்டிருக்கிறது.
40 கோடி இழப்பீடு
ஹியூமன் பேப்பில்லோமா வைரஸ் எனப்படும் எச்.பி.வி. தொற்று பரவியிருக்கிறது. இதனால் கடந்த 2001 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தனக்கு ஏற்பட்டிருக்கும் அந்த பாதிப்புகளை கெய்கோ நிறுவனத்திடமிருந்து 40 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு இருக்கிறார்.
அந்த குற்றச்சாட்டில் பாலியல் நோய் தொற்று ஏற்பட்டிருக்கிறது காதலருக்கு முன்பே தெரியும் . அப்படி என்னிடம் அதை மறைத்து உடலுறவில் ஈடுபட்டு விட்டார்.
கெய்கோ என்கிற இன்ஸூரன்ஸ் செய்யப்பட்ட அந்த காரில்தான் பாலியல் உறவில் ஈடுபட்டோம். இன்ஸ்டால் செய்யப்பட்ட காரில் வைத்து தான் பாலியல் உறவில் ஈடுபட்டதால்,
இதற்கு ஈடாக கைக்கோ நிறுவனம் 40 கோடி வழங்க வேண்டும் என்று கேட்டிருந்தார். கீழ் கோர்ட்டு அந்த பெண்ணுக்கு சாதகமான தீர்ப்பை வழங்கியது .நிறுவனம் மேல்முறையீடு செய்தது.
கீழ் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை மிசோரி கோர்ட் உறுதி செய்தது. அந்தப் பெண்ணுக்கு 40 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
ஆனாலும் எங்கள் நிறுவன கொள்கைகளுக்குள் இந்த கோரிக்கை வராது என்று கெய்கோ நிறுவனம் தொடர்ந்து வாதாடிக் கொண்டிருக்கிறது. பெடரல் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யவிருக்கிறது.