சலினாஸ் பள்ளத்தாக்கில் கடும் வெள்ளம்...பல மதகுகள் உடைந்து விவசாய நிலங்கள் நாசம்

United States of America
By Nandhini Jan 14, 2023 06:52 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

சலினாஸ் பள்ளத்தாக்கில் கடும் வெள்ளம் காரணமாக பல மதகுகள் உடைந்து விவசாய நிலங்கள் அழிந்துள்ளன.

சலினாஸ் பள்ளத்தாக்கில் கடும் வெள்ளம் 

அமெரிக்காவின், சலினாஸ் பள்ளத்தாக்கில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளது. புயல் காரணமாக சாலினாஸ் ஆற்றின் கரைகள் நிரம்பி வழிகின்றன.

ஆற்றின் குறுக்கே பல மதகுகள் உடைந்து விவசாய நிலங்களை வெள்ளத்தில் மூழ்கடித்துள்ளது. சாலினாஸ் பள்ளத்தாக்கில் உள்ள சுவலார் நதி சாலையில் சாலினாஸ் ஆற்றின் வெள்ளம் நிறைந்த வயல்கள் மூழ்கிக்கிடக்கின்றன.

அமெரிக்காவின், சலினாஸ் பள்ளத்தாக்கில் கீரை / சாலட் கீரைகளில் 70% க்கும் அதிகமானவை வளர்க்கப்படுகின்றன. இந்த வெள்ளத்தால் முற்றிலும் விவசாயம் அழிந்துள்ளது.

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

severe-flooding-in-the-salinas-valley