அடுத்தடுத்து மோதிக் கொண்ட வாகனங்களால் 7 பேர் பலி
America
Sand storm
By Petchi Avudaiappan
அமெரிக்காவில் மணல் புயல் காரணமாக 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்காவில் உள்ள யூட்டா மாநிலத்தில் பாலைவனங்கள் பரவலாக அமைந்துள்ள நிலையில் அங்குள்ள கனோஷ் டவுன் பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது.
விபத்தில் 7 பேர் உயிரிழந்த நிலையில், பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேலும் தேசிய நெடுஞ்சாலை சார்பில் வலைதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ள படங்களில் விபத்தில் அடிபட்டுள்ள வாகனங்கள் ஒன்றான பின் ஒன்றாக அணிவகுத்து நிற்கின்றது. அதனை மீட்க வந்துள்ள மீட்பு வாகனங்கள் சாலை முழுவதும் ஆக்கிரமித்துள்ளன. இந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.