ரயில் விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவச கல்வி : சேவாக் அறிவிப்பு

By Irumporai Jun 05, 2023 04:24 AM GMT
Report

ஒடிசா ரயில் விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்க உள்ளதாக சேவாக் அறிவித்துள்ளார்.

 ஒடிசா ரயில் விபத்து

ஒடிசாவில் நடந்த ரயில் விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் ரயில் விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு குருகிராமில் உள்ள சேவாக் சர்வதேச பள்ளியில் இலவச கல்வி அளிக்கப்படும் என்று கிரிக்கெட் ஜாம்பவான் வீரேந்திர சேவாக் அறிவித்துள்ளார்.

ரயில் விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவச கல்வி : சேவாக் அறிவிப்பு | Sevak Notification For Children In Train Accident

 சேவாக் இலவச கல்வி

இது குறித்து சேவாக் தனது ட்விட்டரில், இந்த துயரமான நேரத்தில், நான் செய்யக்கூடியது, இந்த துயரமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குழந்தைகளின் கல்வியை கவனிப்பதுதான். அத்தகைய குழந்தைகளுக்கு சேவாக் இன்டர்நேஷனல் பள்ளியின் உறைவிட வசதியில் இலவசக் கல்வியை வழங்குகிறேன் என்று குறிப்பிட்டுளார்.

    ஒடிசா ரயில் விபத்தில் 200 க்கும் அதிமனானோர் உயிரிழந்த நிலையில், 1,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.