சேது சமுத்திர திட்டம் தொடர்பான தீர்மானம் சட்டசபையில் நிறைவேறியது
சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றக்கோரி முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானம் மீது பேரவையில் விவாதம் காரசாரமாக நடைபெற்றது.
அதிமுகவினர் அமளி
சேது சமுத்திர திட்டம் தொடர்பாக முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானம் குறித்த விவாத்தின் போது இந்த திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டது யார் என்று செல்வபெருந்தகை வைத்த குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்தார்.
அப்போது அவரின் பேச்சுக்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அமளி ஏற்பட்டது. அப்போது முதலமைச்சர் ஜெயலலிதா முதலில் ஆதரித்தார் பின்பு எதிர்த்தார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
அப்போது தோண்டப்பட்ட பள்ளத்தை மீண்டும் மீண்டும் மணல் மூடியதாலேயே திட்டம் குறித்து ஆய்வு செய்ய ஜெயலலிதா வலியுறுத்தியதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
பின்னர் அவைக்குறிப்பில் உள்ளதையே செல்வப்பெருந்ததகை பேசியுள்ளார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தீர்மானம் நிறைவேறியது
அதன் பின் பேசிய ஓ.பன்னீர்செல்வம் கடந்த காலங்களில் நிலைப்பாடுகள் மாறியிருக்கலாம் அதுபற்றி தற்போது பேச வேண்டியதில்லை என்றார் ஓ.பன்னீர்செல்வம்.
குறுக்கிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சனைகள் ஏதுவுமின்றி தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து சட்டப்பேரவையில் சேது சமுத்திர திட்டம் தொடர்பான தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது