சேது சமுத்திர திட்டம் தேவை - சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

M K Stalin Tamil Nadu Legislative Assembly
By Thahir Jan 12, 2023 05:41 AM GMT
Report

சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

பேரவையில் தனி தீர்மானம் 

சேது சமுத்திர திட்டத்தை உடனே அமல்படுத்தக் கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தார் முதலமைச்சர் .

Setu Samudra Project is needed - Chief Minister M.K.Stalin

அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானத்தை வாசித்தார். அப்போது தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும், இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் வலுப்பெற செய்ய மிகவும் இன்றியமைய திட்டமாக சேது சமுத்திரம் திட்டம் விளங்கி வருகிறது.    

1860 ஆம் ஆண்டு 50 லட்சம் ரூபாய் கமண்டோ டெய்லர் என்பவரால் உருவாக்கப்பட்ட மகத்தான திட்டம் இது. அதன் பிறகு 1955ல் தமிழ்நாட்டின் சிறந்த நிபுணர் குழு டாக்டர் ஏ.ராமசாமி முதலியார் குழு,

1963ல் நடைபெற்ற ஒன்றிய அமைச்சரவை கூட்டம் 1964ல் அமைக்கப்பட்ட டாக்டர் நாகேந்திர சிங் ஐசிஎஸ் தலைமையிலான உயர்நிலை குழு ஆகிய பொறியியல் வல்லுநர்களால் பல்வேறு ஆண்டுகாலம் ஆராய்ந்து வடிவமைக்கப்பட்டது தான் சேது சமுத்திர திட்டம்.

இதன் வழித்தடங்கள் ஆய்வு செய்யப்பட்டு சுற்றுச்சூழல் பாதிக்கப்படாத வகையிலே பணிகளை மேற்கொள்ள திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டன.

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் போது பிரதமராக இருந்த அட்டல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் பேஷிபிலிட்டி ஸடெடிக்கு அனுமதி அளித்தார்கள்.

அப்பொழுது தான் சேது சமுத்திர திட்ட வழித்தடம் எது என்பதும் இறுதி செய்யப்பட்டது. பின்னர் ஒன்றியத்தில் காங்கிரஸ் தலைமையிலான அரசு ஆட்சி அமைத்தது.

அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங் 2427 ரூபாய் கோடி மதிப்பில் இத்திட்டத்திற்கு அனுமதிக்கப்பட்டது.

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவராக இருந்த சோனியா காந்தி அவர்களும் முன்னிலை வகிக்க இந்த திட்டத்தை அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் 2.7.2005 ஆம் ஆண்டு துவக்கி வைத்தார்.

திட்டப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை தரைநிமிர வைக்கும் திட்டத்திற்கு குறிப்பாக அதன் மாவட்டங்களை செழிப்பாக வைக்க கூடிய இந்த திட்டத்திற்கு,

தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில் உத்தரவாதம் அளிக்க கூடிய இத்திட்டத்திற்கு முட்டுக்கட்டை போடப்பட்டது. எந்த காரணத்தை கூறி முட்டுக்கட்டை போடப்பட்டதோ..

அதையே நிராகரிக்க கூடிய வகையில் தற்போது ராமேஸ்வரம் கடற்பகுதியில் இருந்து எந்த மாதிரி கட்டுமானம் என்பது கூறுவது கடினம் என்று ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் மாநிலங்களவையில் தெளிவாக சொல்லியிருக்கிறார்.

ஒன்றிய அரசு இப்படி கூறியுள்ள நிலையில், சேது சமுத்திர திட்டத்தை இனியும் நிறைவேற்றாமல் இருப்பது தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் முட்டுக்கட்டை போடும் நிகழ்வாகவே இந்த மன்றம் கவலை தெரிவிக்கிறது.

இனியும் இந்த திட்டத்தை செயல்படுத்தவிடாமல் சில சக்திகள் முயல்வது நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானது என்று இந்த மாமன்றம் கருதுகிறது.

எனவே மேலும் தாமதமின்றி இந்த முக்கியமான சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றிட ஒன்றிய அரசு உடனடியாக முன்வர வேண்டும் என்றும் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு அனைத்துவிதமான ஒத்துழைப்பையும் வழங்கும் என்று தீர்மானத்தை கொண்டு வந்தார்.