மீண்டும் சேது சமுத்திர திட்டம் : சட்டப்பேரவையில் தனி தீர்மானம் கொண்டு வரும் முதலமைச்சர் ஸ்டாலின்

M K Stalin DMK
By Irumporai Jan 12, 2023 04:06 AM GMT
Report

சேது சமுத்திர திட்டத்தை விரைவில் செயல்படுத்த மத்திய அரசை வலியுறுத்தி சட்டபேரவையில் தனித்தீர்மானம் கொண்டு வர உள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.

சேது சமுத்திர திட்டம்

2004 - ஆம் ஆண்டு பிரதமர் மன்மோகன்சிங் இருந்த போது சேது சமுத்திரதிட்டத்தை தொடங்கி வைத்தார், பின்னர் சுற்றுச் சூழல் பாதிப்பு ,ராமர் பால விவகாரம் உள்ளிட்ட சர்ச்சைகளால் திட்டம் தாமதமாக்கப்பட்டது.

இந்த நிலையில், சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்திட மத்திய அரசு முன் வர வேண்டும். இத்திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு அனைத்து ஒத்துழைப்பையும் அளிக்கும்.

மீண்டும் சேது சமுத்திர திட்டம் : சட்டப்பேரவையில் தனி தீர்மானம் கொண்டு வரும் முதலமைச்சர் ஸ்டாலின் | Setu Samudra Project Again Cm Stalin

இந்த திட்டத்தை இனியும் நிறைவேற்றாமல் இருப்பது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இன்று தீர்மானம்

அதன்படி ,இன்று சட்டப்பேரவையில், சேது சமுத்திர திட்டத்தை உடனடியாக செயல்படுத்த மத்திய அரசை வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று அரசினர் தனித்தீர்மானம் கொண்டு வருகிறார்