‘‘வடிவேலு பஞ்சாயத்தை தீர்த்து வைத்தது முதல்வர் கிடையாது, நான் தான்’’ - சீமான் பேச்சு
நடிகர் வடிவேலு நான்காண்டு காலமாக நடிக்க முடியாமல் இருந்துவிட்டு மீண்டும் திரைக்கு வந்துள்ளார்.இயக்குநர் ஷங்கருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அவருக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் ரெட் கார்டு விதித்திருந்தது.
பின்னர் ஷங்கருடன் சுமூகமாக பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காணப்பட்டதால் மீண்டும் நடிக்க வருகிறார் வடிவேலு. இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த நடிகர் வடிவேலு ஷங்கருக்கும் தனக்குமான பிரச்சனையில் முதலமைச்சர் தலையிட்டு தீர்வு கண்டுள்ளார்.
அவரை பார்த்த நாள்முதல் எனக்கு ஏறுமுகம்தான் எனக் கூறினார். இந்த நிலையில் தற்போது பேசியிருக்கும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வடிவேலு பஞ்சாயத்தை தீர்த்து வைத்தது முதல்வர் அல்ல. நான்தான் என்று கூறியுள்ளார்.
வடிவேலுவின் இடத்தை நிரப்புவதற்கு யாரும் இல்லை என்றும் இன்னொருவன் பிறந்துதான் வர வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும்
விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் கூட தமிழ் சினிமாவின் அடையாளங்கள் சிவாஜியும், வடிவேலுவும் என்று கூறியதாக சீமான் தெரிவித்தார்.
வடிவேலு இல்லாமல் மீம்ஸ் உலகமே இல்லை எனக் கூறிய சீமான் அதுபற்றிதான் நாம் தினமும் பேசிக் கொண்டிருக்கிறோம் எனக் கூறினார்.