இதற்காக காத்திருக்கிறேன்: மறைந்த நடிகர் சேதுராமனின் மனைவி உருக்கமான பதிவு

cinema actor celebrity Sethuraman
By Jon Mar 27, 2021 11:53 AM GMT
Report

பிரபல நடிகர் சேதுராமன் உயிரிழந்து ஒரு ஆண்டு ஆன நிலையில் அவர் குறித்து மனைவி உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். கண்ணா லட்டு தின்ன ஆசையா, வாலிபராஜா, சக்கபோடு போடு ராஜா போன்ற திரைப்படங்களில் நடித்த சேதுராமன் கடந்தாண்டு மார்ச் 26ஆம் திகதி மாரடைப்பால் மரணமடைந்தார்.

இளம்வயதில் அவர் உயிரிழந்தது ரசிகர்கள், திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்தது. இவருடைய மனைவி உமையாள் என்கிற உமா. இந்தத் தம்பதிக்கு ஒரு மகள், மகன் இருக்கின்றனர். சேதுராமன் மறைந்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் அவர் குறித்து உமா சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், மா' இப்படித்தான் நான் உங்களை என்றுமே அன்போடு அழைத்திருக்கிறேன். உங்கள் பெயரை வைத்து இதுவரை அழைத்ததே இல்லை. அது ஏனென்றால் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் நான் உங்கள் மீது அன்பும், மரியாதையும் வைத்திருக்கிறேன்.

இதற்காக காத்திருக்கிறேன்: மறைந்த நடிகர் சேதுராமனின் மனைவி உருக்கமான பதிவு | Sethuraman Wife Actor Dead Baby

எனது தினசரி வாழ்க்கை உங்களைச் சுற்றி, உங்களை மட்டுமே சுற்றி இருந்தது. உங்கள் சந்திப்புகளை/ பயணங்களை/ தினசரி நோயாளிகள் பட்டியலை/ உடற்பயிற்சி நேரத்தை/ உணவை/ ஓய்வைத் திட்டமிடுவேன். உங்களுக்கு நெருக்கமானவர்கள் வருத்தமாக இருந்தால் உங்களால் உறங்க முடியாது.

அதிகம் சிந்திக்கும், ஆர்வம் கொண்ட, ஆத்மார்த்தமான, குழந்தைத்தனமான, அப்பாவியான, முதிர்ந்த ஆன்மா நீங்கள். உங்களையும் உங்கள் குணங்களையும் யாராலும் பிரதி எடுக்க முடியாது. ஒரு வருடம் அதற்குள் முடிந்துவிட்டது என்பதை நம்ப முடியவில்லை. நீங்கள் கதவைத் தட்டுவீர்கள் என்று இன்று வரை நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

தட்டுவீர்களா? வேதாந்தும், சஹானாவும் வளர்ந்து கதவைத் தட்டும் வரை நான் காத்திருப்பேன். நீங்கள் தூரமாக இல்லை. எங்களால் கேட்க, பார்க்க முடியாத அளவு நெருக்கமாக இருக்கிறீர்கள் என பதிவிட்டுள்ளார்.