PhonePay, Gpay, Paytmல் பணம் செலுத்தினால் சர்விஸ் சார்ஜ் ரூ.3 கட்டாயம் - உணவகத்தின் அதிரடி அறிவிப்பு
இணையத்தில் கூகுள் பே,போன் பே, Paytm மூலம் பணம் செலுத்தினால் கூடுதலாக சர்வீஸ் சார்ஜ் ரூ.3 செலுத்த வேண்டும் என்று சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ள சம்பவம் வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு ரூ.3 சர்விஸ் சார்ஜ்
வளர்ந்து வரும் விஞ்ஞானத்தில் டிஜிட்டல் பரிவர்த்தனை என்பது அதிகரித்து வருகிறது. மாறிவரும் நவீன உலகில் பெரும்பாலானோர் டிஜிட்டல் பரிவர்த்தனையை செய்து வருகின்றனர்.
நாம் எங்கு சென்றாலும் பணத்தை எடுத்துச் செல்கிறோமோ இல்லையோ கையில் போனை கட்டாயம் எடுத்துச் செல்வோம்.
டீக்கடை முதல் பெரிய மால்கள் வரை நாம் வாங்கும் பொருட்களுக்கு மொபைலில் உள்ள போன் பே, கூகுள் பே, பேடிஎம் உள்ளிட்ட செயலிகள் மூலம் பணம் செலுத்தி வருகின்றோம். ரூ.5 முதல் லட்சக்கணக்கில் நாம் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தி வருகிறோம்.
இந்த நிலையில் இணையத்தில் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அந்த புகைபடத்தில் PHONE PAY, GPAY, PAYTM சர்வீஸ் சார்ஜ் ஆக ரூ.3 கூடுதலாக வசூலிக்கப்படும் என முனியாண்டி விலாஸ் உணவகம் ஒன்று சுவரொட்டி ஒன்றை ஒட்டியுள்ளது.
Is it authorised to collect service charge ? @GooglePay @GooglePayIndia @PhonePe @Paytm @Paytmcare pic.twitter.com/Qyeqr8vkYY
— V.Sasikumar M.E, LLB., from தமிழ்நாடு (@sasikumarv_off) February 24, 2023