கோவிஷீல்டு உற்பத்தியை நிறுத்திய சீரம் நிறுவனம் : காரணம் என்ன ?
கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி தயாரிப்புப் பணிகளை நிறுத்தியதாக சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இதற்காக பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின், சீரம் இந்தியா நிறுவனத்தின் கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. பொதுமக்களுக்காக பயன்பாட்டில் இருந்தன.
தற்போது நாடு முழுவதும் இதுவரை 187 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கோடிக்கணக்கான தடுப்பூசிகள் விற்பனை செய்யப்படாமல் கையிருப்பில் உள்ளதாக கூறி கோவிஷீல்டு உற்பத்தியை நிறுத்தி விட்டதாக சீரம் நிறுவனமம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனத்தின் தலைவர் ஆதார் பூனாவாலா செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தபோது, தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களின் எண்ணிக்கை தற்போது குறைந்து விட்டது .
இதனால் விற்பனையாகாத தடுப்பூசிகள் அதிக அளவில் எங்களிடம் கையிருப்பில் உள்ளது. 20 கோடி தடுப்பூசி கையிருப்பில் உள்ள நிலையில் அவற்றை என்ன செய்வது என்று தெரியாமல் வைத்துள்ளோம் .
அது காலாவதி ஆகிவிடும் என்பதால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே தடுப்பூசி உற்பத்தியை நிறுத்தி விட்டோம். கோவிஷீல்டு தடுப்பூசி உற்பத்தி செய்த தேதியிலிருந்து 9 மாதங்கள் வரை பயன்படுத்த இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளதாக கூறினார்.
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan