கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் சீரம் நிறுவனத்தில் தீ விபத்து.!

maharashtra pune broke
By Jon Jan 23, 2021 01:41 PM GMT
Report

உலகின் மிகப்பெரிய தடுப்பு மருந்து தயாரிக்கும் நிறுவனங்களில் இந்தியாவின் புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிட்யூட்டும் ஒன்று. இங்குதான் கொரோனா தொற்றுக்கு எதிரான கோவீஷீல்ட் தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இன்று அந்த நிறுவனத்தில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ள கட்டடத்தில் தற்போது தடுப்பூசி தயாரிப்புப் பணிகள் தொடங்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு 10 தீயணைப்பு வண்டிகள் விரைந்துள்ளன. 

 

தீயை கட்டுக்குள் கொண்டுவரும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆக்ஸ்ஃபோர்ட் - ஆஸ்ட்ரசெனகாவுடன் இணைந்து உருவாக்கப்பட்ட கோவிட் தடுப்பூசிகள் இங்குதான் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

நிமிடத்திற்கு ஆயிரக்கணக்கான தடுப்பூசிகள் இங்கு தயார் செய்யப்படுகின்றன. இந்தியா மட்டும் அல்லாது பல நாடுகளும் இங்கு தயாரிக்கப்படும் தடுப்பூசிகளையே சார்ந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.