இந்தியாவில் 14 முதலமைச்சர்கள் மீது குற்றவியல் வழக்கு- பட்டியலில் விஜய்
இந்தியாவின் 14 மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கு எதிராக தீவிர குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் பதவியில் உள்ள முதலமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தான அறிக்கையை மூத்த வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியா உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
14 முதலமைச்சர்களுக்கு எதிரான குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி- 89 வழக்குகள்
மேற்குவங்க முதலமைச்சர் சுவேந்தி அதிகாரி- 29 வழக்குகள்
கர்நாடகா முதலமைச்சர் டிகே சிவகுமார்- 19 வழக்குகள்
ஆந்திரா முதலமைச்சர்- சந்திரபாபு நாயுடு- 19 வழக்குகள்
கேரளா முதலமைச்சர் விடி சதீசன்- 18 வழக்குகள்
ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன்- 5 வழக்குகள்
மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னவீஸ்- 5 வழக்குகள்
ஹிமாச்சல பிரதேசம் முதலமைச்சர் சுக்வீந்தர் சிங்- 4 வழக்குகள்
பீகார் முதலமைச்சர் சாம்ராத் சௌத்ரி- 2 வழக்குகள்
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்- 2 வழக்குகள்
சிக்கிம் முதலமைச்சர் தமாங்- 1 வழக்கு
பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான்- 1 வழக்கு
ஒடிசா முதலமைச்சர் மோகன் சரண் மாஜி- 1 வழக்கு
ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன் லால் சர்மா- 1 வழக்கு