சீரியல் நடிகர் சுஷீல் திடீர் தற்கொலை - என்ன நடந்தது?

actor sucide serial susheel
By Anupriyamkumaresan Jun 08, 2021 03:39 AM GMT
Report

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த டிவி சீரியல் நடிகர் சுஷீல் கவுடா திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கர்நாடகாவின் மாண்டியாவைச் சேர்ந்த டிவி சீரியல் நடிகர் சுஷீல் கவுடா, டிவி சீரியல் மூலம் மக்களுக்கு பிரபலமானவர்.

கர்நாடக சினிமாவில் வெளியாகவுள்ள சலகா என்ற திரைப்படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

இந்நிலையில், மண்டியாவில் உள்ள தன்னுடைய வீட்டில் சுஷீல் திடீரென தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.

சீரியல் நடிகர் சுஷீல் திடீர் தற்கொலை - என்ன நடந்தது? | Serilal Actor Susheel Suicide

நடிப்பு துறையை தாண்டி பிட்னஸ் பயிற்சியாளராக சுஷீல் கவுடா இருந்து வந்தார். அவரது மரணம் கர்நாடக திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, மாண்டியா காவல்துறை கண்காணிப்பாளர் பரசுராம் பேசுகையில், சுஷீல் கவுடா மாண்டியாவின் இந்துவலு பகுதியில் உள்ள தன்னுடைய வீட்டில் தற்கொலை செய்து கொண்டார் என தெரிவித்துள்ளார்.

சீரியல் நடிகர் சுஷீல் திடீர் தற்கொலை - என்ன நடந்தது? | Serilal Actor Susheel Suicide

மேலும் பிரேத பரிசோதனை முடிந்த பின்னர் அவரது உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் தற்கொலை தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.