மார்பில் பிரச்சணை; வெளிய சொல்ல முடியல.. அப்பா மேல வெறுப்பு - ஸ்வேதா வேதனை!

Serials
By Sumathi Sep 15, 2023 08:02 AM GMT
Report

சீரியல் நடிகை ஸ்வேதா கசப்பான அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

நடிகை ஸ்வேதா

கனா காணும் காலங்கள் தொலைக்காட்சி தொடர் மூலம் நடிகையானவர் ஸ்வேதா சுப்ரமணியன். கார்த்திகை பெண்கள், அழகி, சின்ன தம்பி உள்ளிட்ட முக்கிய தொடர்களில் நடித்தார். இந்நிலையில், இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில்,

மார்பில் பிரச்சணை; வெளிய சொல்ல முடியல.. அப்பா மேல வெறுப்பு - ஸ்வேதா வேதனை! | Serial Swetha Subramanian About Personal Life

எனக்கு ரொம்ப சோகமாக இருக்கும் போது, காரில் பாடல் போட்டுக் கொண்டு கடற்கரைக்குச் சென்று விடுவேன். நான் வாழ்க்கையில் நான் ரொம்ப உடைந்து போயிருந்தேன். என் வாழ்க்கை வேறு மாதிரி ஆகும், ஒரு குடும்பம், சாதாரண வாழ்க்கை என்று இருக்கும் என நினைத்தேன்.

பல பிரச்னைகள்

ஆனால், ஒரு ஸ்டேஜ்க்கு அப்புறம் தான் எனக்கு தெரிந்தது, மற்றவர்களுக்கு உடல் ரீதியான தொந்தரவு நடக்கும் போது அது எனக்கு வலியாக இருக்கும். இப்படி கூட மனிதர்கள் இருப்பார்களா? என்று எனக்கு கோபம் வரும். எனக்கு இது நடக்கும் போது, என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. என்னால் வெளியே சொல்லவும் முடியவில்லை, சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை.

மார்பில் பிரச்சணை; வெளிய சொல்ல முடியல.. அப்பா மேல வெறுப்பு - ஸ்வேதா வேதனை! | Serial Swetha Subramanian About Personal Life

என்னை ஒரு அறையில் அடைத்து வைத்திருந்தனர். வெளிப்படையாக என்னால் பேச முடியவில்லை. சோஷியல் மீடியாவில் கூட நான் இல்லாமல் இருந்தேன். என்றாவது ஒரு நாள் என் வாழ்க்கை மாறாதா என்று காத்திருந்தே 3 ஆண்டுகள் ஓடிவிட்டது.

என் மார்பு, கண் எல்லாமே பிரச்னையானது. ஒவ்வொரு முறை டாக்டரிடம் போய் நிற்கும் போது அவமானமா இருந்தது. இது எல்லாமே ஸ்ட்ரெஸ் தான் காரணம். வெயிட் வேறு போட்டது. வெயிட் ஆன வாய்ப்புகள் வராது. இப்படி பல பிரச்னைகள்.

கோயில் போய் எல்லா பிரச்னையையும் மீட்டேன். ஒரு கட்டத்தில் ஆண்களே இப்படி தானா? என்று என் அப்பாவை கூட வெறுக்கத் தொடங்கினேன். ஆனால், எல்லா ஆண்களும் இப்படி இல்லை, சில நல்லவர்களும் இருக்கிறார்கள்.

பலரால் ஏமாற்றப்பட்டு, நான் பலரை வருத்தப்பட வைத்திருக்கிறேன். அதற்கு காரணம் நான் சந்தித்த வலி தான் என வேதனை தெரிவித்துள்ளார்.