பெரிய மனுஷன் செய்ற வேலையா இது - நடிகர் பப்லு செய்த செயலால் கூச்சல் போட்ட நடிகை

nimishika Actor prithiveeraj
By Petchi Avudaiappan Sep 21, 2021 12:13 AM GMT
Report

 சின்னத்திரை நடிகை நிமிஷிகாவை நடிகர் பப்லு ஷூட்டிங் ஸ்பாட்டில் பயமுறுத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல தொலைக்காட்சியான சன்டிவியில் ஒளிபரப்பாகும் கண்ணான கண்ணே சீரியலுக்கு பொதுமக்களிடையே அதிகளவு வரவேற்பு உள்ளது. இதில் மீரா என்ற கேரக்டரில் நடித்து வரும் நடிகை நிமிஷிகாவுக்கு சமூக வலைத்தளங்களில் எக்கச்சக்க ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் நிமிஷிகா ஷூட்டிங் ஸ்பாட்டில் பயத்தில் கதறும் வீடியோவை நடிகர் பப்லு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் பாம்பு போல ஊர்ந்து சென்று நிமிஷிகாவை பின்னால் இருந்து பயமுறுத்தி இருக்கிறார். இதில் அரண்டு போன நிமிஷிகா கத்துவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது.